Breaking News

அனுராதபுர சிறைச்சாலையை அதிர வைத்த மாணவர்கள் போராட்டம் ...(காணொளி)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் நடைபெற்றுள்ளது. 

நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலி யுறுத்தி கடந்த 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத் துள்ளனர்.

இந்நிலையில், அரசியல் கைதிக ளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல் கலைக் கழக மாணவர்கள் அநுராதபுரத்தை நோக்கி நடை பவணி ஒன்றை மேற்கொண்டனா்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாண வர்களும் இணைந்து கொண்டனர்.அந்த வகையில், சற்று முன்னர் அனுராதபுர சிறைச்சாலையை சென்றடைந்த நிலையில் அரசியல் கைதிகளைப் பார்வை யிடவுள்ளனா்.

மேலும் நடைபவனியாகச் சென்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் மூன்று அர சியல் கைதிகள் வீதம் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை முன்பாக- மாணவர்கள் போராட்டம்! அநுராதபுரம் சிறைசாலை சென்றடைந்த மாணவர்கள் தற்போது சிறைச்சாலை முன்பாகப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று அநுராதபுர த்தை அடைந்துள்ளது.

அங்கு சிறைச்சாலை முன்பாகக் கூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோசங்களை எழும்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இப் போராட்டத்தால் சிறைச்சாலை அதிகாரிகள் சற்று குழப்ப மடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.