Breaking News

தமிழர்கள் நினைத்தால் சாதிக்கலாம் - பாரதிராஜா.!

ஈழத்திலுள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்து விடும் வல்லமை உடையவா்கள் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இய க்குர் பாரதிராஜா நேற்று (திங்கட் கிழமை) மாலை யாழ்.ஊடக அமை யத்தில் ஊடகவியலாளரிடம் கலந்து ரையாடியுள்ளாா்.

அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஈழ த்து சினிமாவை நீங்கள் எவ்வாறு பார் க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள் ளனா்.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்,

“ஈழத்தில் உள்ள தமிழர்களும், இந்திய தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒரே உணர்வை, ஒரே திறமைகளை, ஒரே கலைப்படைப்பை கொண்டவர்கள். இரு வர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை.

ஆனால் தென்னிந்திய சினிமா கண்ட வளர்ச்சியினை ஈழத்து சினிமா காண வில்லை. இதற்கு ஈழத்தில் இருந்த பிரச்சினைகளே காரணமாகும். அந்த பிரச் சினைகளால் ஈழத்திற்கு வளங்கள் கிடைக்கவில்லை.

இதனாலேயே போதிய வளர்ச்சியினை ஈழத்து சினிமா எட்டவில்லை. உல கெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரி வித்துள்ளாா்.