Breaking News

முப்பது வருட கொடூர யுத்தத்திலிருந்து மீள முடியாத தமிழ் மக்கள்! (காணொளி)

புதிய அரசியல் சாசனம் நிச்சயமாக அமைக்கப்படுமென தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித் துள்ளாா். 

புதிய அரசியல் சாசன உருவாக்கப் பணிகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரில் 36 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நகரப் பொதுச் சந்தைக் கட்டத்தினை எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளாா்.

கட்டடத்தினைத்திறந்து வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தையைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், வியாபாரிகளுடனும் கலந்துரை யாடி அவர்களது தேவைகளையும் ஆராய்ந்துள்ளாா்.

இந் நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் தமிழ் மக்களின் பிரச்சினை க்கு தீர்வு காணக்கூடிய புதிய அரசியல் சாசனமானது இன்று அல்லது என்றோ உருவாக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

மேலும் 30 வருட கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் கஷ்டத்தின் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வரு வதாக தெரிவித்த இரா. சம்பந்தன், நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.