இந்தியா மீது குற்றச்சாட்டு மைத்திரிபால சிறிசேனா.!
இந்தியா தம்மை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாதெனவும் இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளாா்.

அதன் அடிப்படையிலேயே அவரது பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அதி பர்கள் பங்கேற்றனர். தொடர்ந்தும் அயல் நாடுகளுடன் நல்லுறவினை மேற் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென அறிவித்து வெளிவிகாரத்துறை செயலாற்றிக் கொண்டிருக்கையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா குற்றம் சுமத்தியுள்ளாா்.
இந்திய புலனாய்வு நிறுவனம் (RAW) என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து தெரியாது என்ற பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
முன்னதாக, தெற்காசிய பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா மிகப்பெரும் அச் சுறுத்தலாக உள்ளதென பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அச் சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.