Breaking News

இன்றைய வானிலை தெரிவிப்பு.!!!

நாட்டின் இன்றைய காலநிலை நிலவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங் களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, மற்றும் வடமேல் மாகாண கரையோரப் பகுதி களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது.  

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகா ணங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பொழியும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்கா லிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.