Breaking News

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை.!

கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 20 வது வயது கோலூன்றிப் பாய்தலில் செல்வன் அ.புவிதரன் 4.55m உயரம் தாண்டியுள்ளாா்.

இதில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக் கத்தை வென்றதுடன் சாவகச்சேரி இந்துக் கல் லூரிக்கு பெருமையைச் சேர்த்துள்ளார். இதே வேளை, இலங்கையில் நடைபெறும் மெய்வண்மைப் போட்டிகளில் யாழ் மாவட் டத்தைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி தேசிய ரீதியில் சாதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளாா். 
இம் மாணவனுக்கு எமது இணையம் சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.