Breaking News

பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க திட்டம்.!

சரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்வ தாக ஆங்­கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜனா­தி­ப­தி­யையும் முன்னாள் பாது­காப்புச் செய­ல­ரையும் கொலை செய் யும் சதித் திட்டம் தொடர்­பாக நாமல் குமார என்­பவர் தகவல் வெளி­யிட்­டி­ருந்தார். இதன் அடிப்­ப­டையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது.

இச் சதித் திட்­டத்தில் சரத் பொன்­சே­கா­வுக்கு தொடர்பு இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்றும், அதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் செயற்­பட்­டதாக ஜனா­தி­பதி குற்­றம் ­சுமத்தியுள்ளாா்.

இந்த நிலை­யி­லேயே சரத் பொன்­சே­கா­விடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்­டத்தைப் பறிப்­ப­தற்­கான, சட்ட நடை­மு­றைகள் குறித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆராய்ந்து வரு­வ­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பீல்ட் மார்ஷல் பத­வி­யா­னது, செயற்­பாட்டில் உள்ள ஒரு இரா­ணுவ நிலை­யாகும். அவ­ருக்கு ஒரு பணி­ய­கமும், முழு­மை­யான இரா­ணுவப் பாது­காப்பும் இருக்­கி­றது.

சுதந்­திர நாள் அணி­வ­குப்பு,வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பு­களில் அவர் இன்­னமும் இரா­ணுவ சீரு­டை­யி­லேயே பங்­கேற்­கிறார். அவர் இன்­னமும் இரா­ணுவ சேவையில் இருக்­கிறார் என்­பதை இது தெளி­வு­ப­டுத்­து­கி­றது“ என ஜனா­தி­பதி செய­லக அதி­காரி ஒருவர் தெரி­வித்துள்ளாா்.

எனினும், சட்ட நெறி­மு­றை­க­ளின்­படி, பாது­காப்பு தலை­வ­ராக இருப்­ப­தற்கு ஜனாதிபதி அதிகாரம் அளிக்க வேண்டும். எனவே, சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.