Breaking News

பரபரப்பான சூழலில் மஹிந்த தரப்பின் அதிரடித் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இச் சந்தர்ப்பத்தில் நடத்துவது சட்டவிரோதமான செயல் எனச் சுட்டிக்காட்டி குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் அவசரமாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப் பட்டமை தொடர்பிலும் பிரதமர் மற் றும் அமைச்சரவைக்கு எதிரானது மான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அமர் வுகளை நடத்துவது சட்ட விரோத மான செயல் என சுட்டிக்காட்டியே இக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினர் மேற்படி கடிதத்தினை சபாநாயகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய சபை அமர்வுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டணியினர் புறக்கணித்திருந்துள்ளனா்.