Breaking News

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லையாம்.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறி வாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெ டுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாமென உச்ச நீதிமன்றம் தெரிவித்த மூன் றாம் நாளில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்க அமைச்சர வையைக் கூட்டி ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்கண்ட அமைச்சரவை யில் பரிந்துரையை கிடப்பில் போட் டுள்ளது ஆளுநர் மாளிகை. ஏழுபோ் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் இந்த மௌனம் தமி ழார்வலர்களை அதிருப்தியடைந் துள்ள சூழலில், பேரறிவாளன் உள் ளிட்டோரை உடனடியாக விடுவிக்க கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 தமிழக அரசியல் கட்சிகள். இந்த நிலையில், ஏழுபேர் விடுதலை விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜகவின் முன்னணி தலைவர் கரு.நாகராஜன், "பேரறி வாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது என்பது சாத்தியப்படாதது. காரணம், அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள்.

இந்த நாட்டின் தலைவரை கொன்றவர்கள். அவர்களை விடுவிக்க கூறுவோர் அந்த சம்பவத்தால் கொலை செய்யப்பட்ட மற்றைய தமிழர்களுக்காக ஏன் பேசவில்லை" என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "இவர்கள் எழுவரை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துவதை விட சட்ட ரீதியாக முயற்சிக்கட்டும்" என தெரிவித்துள்ளார். முன்னதாக, பேரறிவா ளன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்து ஆளு நருக்கு பரிந்துரைக்கலாமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.