Breaking News

ஐக்கிய தேசிய முன்னணியின் திடீர் திருப்பத்தினால் குழப்பத்தில் தென்னிலங்கை!

ஸ்ரீ லங்காவின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணி யைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதன்படி ஐக்கிய தேசிய முன்னணி யைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை சந்திப்பொன்றில் கூடியே இந்த ஏகோபித்த முடிவுக்கு வந்திருப் பதாக கொழும்புச் செய்திகள் தெரிவித் துள்ளன.

இம் முடிவின் பிரகாரம் இன்று மாலை சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை சந்திக்கும்போது தமது நிலைப்பாட்டை நேரடியாகவே தெரி விக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ரணில் அல்லாத பிரதமர் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் ரணிலை ஒருபோதுமே பிரதமராக நியமிக்கப்போவதில்லை எனவும் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன கூறிவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளமை அரசியலை மேலும் சிக்கல் நிலைக்கு அமா்த்தியுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.