Breaking News

“உருவப் பொம்மையை ஆயிரம் முறை எரியுங்கள்” ஆனால் தமிழரின் கொள்கைகளை எரித்து விடாதீர்கள்.!

தனது உருவப்பொம்மைய ஒருமுறையல்ல ஆயிரம் தடவை எரித்தாலும் அது குறித்து கவலையில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கட்சியின் தலைவரான வட மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் நீண்டகால கொள்கைகளை எரித்து விடாதீர்கள் என்று எச் சரிக்கை விடுத்துள்ளாா்.

வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற வைபவமொன்றில் கல ந்து கொள்வதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசரான விக்னேஸ்வரன் இன்று அங்கு சென் றிருந்த நிலையில் அவருக்கு கண் டனம் தெரிவித்து வவுனியா நகரம் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, கூட்டமைப்பிற்கு மாற்றாக தமிழ் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதை எதிர்த்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இந்த எதிர்ப்பை தெரிவித் துள்ள நிலையில்....,

வட மாகாணத்தின் முன்னாள்முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது உருவப் பொம்மையை எரித்தாலும், தமிழ் மக்களின் நீண்டகால கொள்கைகளை எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளுடன் சேர்த்து எரித்து விடாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் மக்கள் நலத்திட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படு கின்ற, வவுனியா நகரசபையின் பல்துறை சேவையாளர் விருதுவழங்கும் விழா வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் டிசெம்பர் 2 ஆம் திக தியான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வடமகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்....  இன்று வவு னியாவில் நடை பெறும் இக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு கட்சி சார்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்து எனது உருவப்பொம்மையை எரிப்பதற்கு ஆயத்தமா கியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்கள்.

என்னைப் பொறுத்த வரையில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அக் கட்சியைச் சார்ந்தோர் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். என் னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சி யுடன் சேர்த்து எரித்து விடாதீர்கள் எனத் தயவுடன் தெரிவித்துள்ளாா்.