தலைவரை தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிகை கொளுத்தப்பட்டது!(காணொளி)
விடுதலைப்போராட்டத்தை அதன் வரலாற்றை திரிபுபடுத்தி கதை சொல்லும் நாளிதழ் தனது பரபரப்பிற்கு இரவு இரண்டுமணிக்கு பெண் கேட்டார் தேசிய தலைவரென முன்பக்க தலைப்பிட்டு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்துடன் இம்முறை தனது வெளியீட்டை பிரசுரித்திருந்தது.
தமிழக கொலையாளி ஒட்டோ சங்கர் கதைக்கு இத்தகைய தலைப்பிட்டு மலின விளம்பரம் தேடமுற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனிடையே இழுத்து மூடப்படும் நிலையினை அடைந்துள்ள வார இதழை பிரபல்யப்படுத்த இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவதாக சொல்லப்படுகின்றது.