தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கியுள்ளது - டக்ளஸ்
அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடக மாக்கி ஊடகங்களிலே காட்டிக் கொண்டுத்து வருகின்றது. தேசிய பாதுகாப் பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்தி விட்டால் ஒரு முதலீட்டாளராவது இந்த நாட்டின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர் பான சபை ஒத்திவைப்புவேளை பிரே ரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இதுவரையில் எத்தனையோ பாரதூரமான ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன.பொது மக்களது பணம் பட்டப்பகலிலே கொள்ளையிடப்பட் டுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளமாக ஏற்பட்டுள்ளன.
இவை பற்றி எல்லாம் இத்தகைய பகிரங்கமான விசாரணைகள் மேற்கொண்டு மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டு வராமல் ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான உள்விவகாரங்களை தெரிவுக்குழுவில் இவ்வாறு பகிரங்கப்ப டுத்திக் கொண்டிருப்பது இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
எனவே தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்தி விடாதீர் கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் பலம், இரகசியத் தன்மை,மதிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டு நலன்களில் அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாட் டில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.