Breaking News

உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியது. !

இங்கிலாந்தின், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண இறு திப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 

உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அணி பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கைப்பற்றியுள் ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 12 ஆவது உலகக் கிண்ண தொட ரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற் றது.

இப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங் களைப் பெற்றது.

பின்னர் பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி 242 ஓட்டங் களைப் பெற்றால், உலகக்கிண்ணத்தை கைப்பற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் ஜேசன் ரோய் 17 ஓட் டங்களுடனும் ஜோனி பேர்ஸ்டோவ் 36 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

பின்னர் வந்த ஜோ ரூட் 7 ஓட்டங்களுடனும் மோர்கன் 9 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைச் சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் வெற்றி பெற இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலை யில் இங்கிலாந்து அணியால் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங் கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்றது. சுப்பர் ஓவரில் 16 ஓட் டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண் ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது.

26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கிண்ணம் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத்தை முதல் முறையாக இங்கிலா ந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

எவ்வாறு சம்பியனானது இங்கிலாந்து போட்டி 2 ஆவது முறையாகவும் சம நிலையாகும் பட்சத்தில் ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். அந்த வகையில் நியூசிலாந்தை விட இங் கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் சுப்பர் ஓவரையும் சேர்த்து இங்கிலாந்து அணி 24 பவுண்டரி களையும் நியூசிலாந்து அணி 14 பவுண்டரிகளையும் பெற்றுக்கொண்டன. 44 ஆண்டு கால உலகக்கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் இங்கிலாந்து முழு வதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.