Breaking News

யாழில் பட்டதாரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவயீர்ப்பு போராட்டம் நடாத் தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயி ரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாத அதாவது, 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை நிய மனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் வெளி வாரிப் பட்டதாரிகள் மாணவர்களே இந்த கவனயீர்பபுப் போராட்டத்தினை முன்னெடுத் துள்ளனா்.

இதில் கலந்து கொண்ட பட்டாதரிகளிடைடைய வெளிவாரி உள்வாரி என்ற பாகுபாடு காட்டோத, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உட னடியாக வேலை வாய்ப்பினை வழங்கு, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதா தைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதேவேளை, யாழ்.மாவட்ட செலயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்குச் சென்று மாணவர் களை சந்தித்துள்ளனா்.

இதில் கலந்து கொண்ட கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிககையில், நாட்டில் உள்ள சகல பட்டாதாரி மாணவர்ளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஐக்கய தேசிய அரசாங்கம் அமைச்ச ரவை பத்திரத்தை போடவுள்ளது.

இனிவரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இனி மேலும் பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த அரசாங்கம் இடமளிக்காமல் வேலை வாய்ப்பினை வழங்க ஆலோசித்து வரு கின்றது.

இந்த நிலையில் தற்போது போராட்டத்தினை மேற்கொணடு வரும் மாணவர் களின் கோரிக்கை அதாவது நியமனம் தொடர்பான பிரச்சினை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் தீர்த்து வைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.