Breaking News

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதியால் புதிய அலுவலகம் திறப்பு.

பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளை ஆராய்ந்து விரைவான தீர்வுகளை வழங்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு ஒம்புட்ஸ்மேன் (Ombudsman) 
அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற மூத்த துணை பொலிஸ்மா அதிபர் ஜெனரல் எஸ். எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 



ஒம்பூட்ஸ்மேன் அலுவலகத்தை அமைத்ததன் நோக்கம், 
அரச அதிகாரிகளின் அலட்சியம் அல்லது அவர்களின் நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் எல்லைக்கு அப்பால் செயல்படுவதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசோகரியங்களை நிவர்த்தி செய்து அதற்கான தீர்வுகளை வழங்குவதாகும். 

இந்த அலுவலகம் 3rd Floor, Old Standard Chartered Bank Building, Janadhipathi Mawatha, Colombo 1 இல் அமைந்துள்ளது. 

பொதுமக்கள் தங்கள் புகார்களை அல்லது குறைகளை அலுவலகத்திற்குச் சென்று நேரில் சமர்ப்பிக்க முடியும் அல்லது அவர்கள் தங்கள் பிரச்சினைகளை  “Ombudsman, Presidential Secretariat, Colombo 1” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். 

அத்துடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும். 
தொலை பேசி எண் - 011 2338073  
மின்னஞ்சல் முகவரி - ombudsman@presidentsoffice.lk

போதைப்பொருள் கடத்தல் பற்றியோ, பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களையோ, சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் எந்த சட்டவிரோத செயலைபற்றியோ இங்கு முறைப்பாடு செய்ய முடியுமென எஸ். எம். விக்ரமசிங்க குறிபிட்டுள்ளார்.