Breaking News

பெற்றோர், மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.