Breaking News

எதிரணியில் இருந்து 10 உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு தாவல்!

நாட்டில் தேர்தலை தொடர்ந்து புதிய அமைச்சரவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எதிரணியில் இருந்து 10 உறுப்பினர்கள் மகித்த அரசாங்கத்தில் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துதிய 4 உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

மேலும் மலையக கட்சி ஒன்றில் இருவரும், கிழக்கில் சிறிய கட்சி ஒன்றில் இருவரும் வட மத்திய மாகாணத்தில் ஒருவரும் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் அவர்களுக்கு அமைச்சு வழங்குவதற்கு எவ்வித வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இவர்களில் ஒருவர் சஜித் பிரேமதாஸ அணியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.