Breaking News

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை..!!

திருகொணமலை பகுதியில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன் தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் புகுந்து திருடியவர்களை காட்டிக் கொண்டிருந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.இந்த கொலைச் சம்பவம் திருகோணமலை- பூவரசன்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாடசாலையொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் காட்டியமைக்காக பழிவாங்கும் நோக்கில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அந்த சம்பவத்தில் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைடுத்து இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.