Breaking News

டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து!

டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (AirIndia Express) விமானம் கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிய நிலையில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் விமானம் இரு துண்டுகளாக உடைந்துள்ளது. 

இச்சம்பவம் இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விமானத்தில் 191 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விமானி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டில் சிக்கியவர்களை அழைத்து வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட பயணிகள் 24 அம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் மீட்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.