Breaking News

TikTok, WeChat செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன் டிரம்ப் தடை உத்தரவு

சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன், தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கையெழுத்திட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து" எனக்கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை ஏற்கனவே இந்தியா தடை செய்ததை அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் இரண்டு சீன ஆப்களும்  அச்சுறுத்தலாக இருப்பதாகக் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளர்களின் விவரங்களை திருடி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு 45 நாட்களுக்குப் பின் அமலுக்கு வர இருக்கிறது. டிக்டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.