Breaking News

முதலாவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்!


20 வது அரசியலமைப்பு திருத்தை இந்த வாரம் கூடவுள்ள புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும் பயணிகள் தற்போது இடம்பெற்ற வருவதாக தெரிய வருகின்றது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது தேர்தலின் போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போதை ஆளும் தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன. 

19 வது திருத்தத்தின் ஊடாக நாட்ன் நிர்வாக முறைமையில் ஏற்பட்ட குழப்பங்களால் அரச நிர்வாகம் நிலையற்ற தன்மைக்கு உள்ளானதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். 

அத்துடன் 19 வது திருத்தில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்த பின்னணியில் அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் 20 ஆவது அரசியலமைப்பிற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. 

தயாரிக்கப்பட்டு வரும் 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் ஊடாக 19 வது அரசியலமைப்பு சீர்திருத்ததுடன் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் ரத்து செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.