அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்னும் சற்று நேரத்தில்!
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.முற்பகல் 8.30 மணிக்கு கண்டி மங்குல் மடுவவில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றியது.
அதன்படி, கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 20 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








