மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் நியமனம் - வடமாகணம்
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.
யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும், திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.








