தேசியப்பட்டியல் குறித்த முடிவில் மாற்றமில்லை - சம்பந்தன் | மத்திய குழு எதிர்வரும் 29 கூடவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில்
இடம்பெற்றது. குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இடம்பெற்றது. குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஶ்ரீதரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் பின்னராக செய்தியாளர்களுக்கு கருத்தும் தெரிவித்த இரா.சம்பந்தன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதாகவும் அனைவருது கருத்துக்களும் கேட்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமன முடிவில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்ட அவர் மத்திய குழு எதிர்வரும் 29ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ளதாகவும் அதில் மற்றைய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







