Breaking News

மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது அமைச்சுக்களின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதனடிப்படையில் நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம் அமைச்சுக்களின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

மகா சங்கத்தினர் முன்னிலையில் நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பின்னர் புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம் அமைச்சராக கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.