Breaking News

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக STF அதிகாரிகள்!


நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை முற்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைப்படுத்துவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்வைத்த வேண்டுகோளிற்கு அமைய பாதுகாப்பு அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை முற்படுத்துவற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சிறைச்சாலை மதில்களுக்கு மேலால் சட்ட விரோத பொருட்கள் வீசப்பட்டதுடன் அது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்த நிலமையை கருத்திற்கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை சிறைச்சாலைகளுக்கு வெளியில் நிறுத்தி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதே இந்த நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.