புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இவ்வாரம்!
சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்கள் கடந்த 12 ஆம் திகதி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 39 இராஜாங்க அமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
இம்முறை அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது








