ரவிராஜின் நினைவுத்தூபி அருகில் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுத்தூபி அருகில் சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் இந்தப் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் சசிகலா ரவிராஜுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அமரர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலையின் முகத்திற்கு கருப்பு நிறை துணியினால் மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சசிகலா ரவிராஜினை அவரது இல்லத்தில் வைத்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கஜன் ராமநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று சந்தித்திருந்தனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஏ சுமந்திரன் பதவியேற்கின்றமைக்கு இடைக்கால தடையுத்தரவு கோரவுள்ளதாகவும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம். கே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.








