சிறி,சுமந்திரன் பேச்சுவார்த்தை அடியோடு நிராகரித்தார் மாவை
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு எதிரான காய் நகர்த்தல்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக இடம்பெற்றுவருின்றது.
இதன் ஒரு அங்கமாக நேற்று நேரடியாகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீரென பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றினை கூட்டி மாவைக்கு எதிரான காய்நகர்த்தல்களை ஆரம்பித்திருந்தார்.
ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியவாறு தேர்தலில் சிறிதரன் சுமந்திரன் கூட்டு என்பது சம்பந்தன் மாவை ஆகியோரை ஓரம்கட்டி கூட்டமைப்பையும் தமிழரசு கட்சியையும் தலைமையை கையகப்படுத்துவதற்காகவே எனத் தெரிவித்திருந்தோம்.
அதன் ஒரு ஏற்பாடாகத்தான் தேர்தல் முடிவுகள் குழப்பமாக முடிவடைந்து மறுநாளான நேற்றே அவசரமாக பத்திரிகையாளர் மகாநாட்டினை கூட்டி கட்சி தலைமை தோல்வியடைந்துவிட்டது என்றதோடு நிற்காமல் கட்சியில் செயலாளரும் தோல்வியடைந்துள்ளார் கட்சி மறுசீரமைக்க வேண்டுமென பகிரங்கமாக சுமந்திரன் சொல்லியிருந்தார்.
இது தொடர்பில் பல ஆதாரங்கள் தமிழ்கிங்டொத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நேற்றிரவு மாவையின் வீட்டிற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் வரவுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தினை கனடாவிலிருந்து இறக்கிவிடப்பட்ட தமிழரசின் நிதிமூலமான தோல்வியடைந்த குகதாசனுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர். இதனை அடியோடு நிராகரித்த மாவை தரப்பு தேசியப்பட்டியல் பெண்ணொருவருக்கே வழங்கவேண்டும் என முடிவாக சொல்லிவிட்டதாகவும் தெரியவருகின்றது.
குகதாசனால் கட்சிக்கு வழங்கப்பட்ட 22கோடி நிதி தொடர்பில் கேள்வி எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் எதிர்காலத்தில் சிக்கல்கள் வரலாம் என்பதற்காக அவரை எம்.பி ஆக்கி நிலமையை சீராக்குவதுடன் அந்த ஆசனம் சசிகலா தரப்புக்கும் சென்றிவிடாமல் தடுப்பதற்கான இருமுனை நகர்வினையே சுமந்திரன் தரப்பு முயன்றதாக தெரியவருகின்றது.
இந்த பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடையாக காரணத்தினாலேயே அங்கிருந்து வெளியேறிய சிறிதரன் சுமந்திரன் பாணியில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தியது மட்டுமல்லாது தமிழரசு தலைமை தனக்கு கிடைத்தால் அதனை ஏற்றுகொள்ளுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
அவர் இன்று நடாத்திய சந்திப்பில் தமிழரசுக்கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் இளம் இரத்தம் பாச்சப்படவேண்டுமென்று தெரிவித்ததோடு மட்டுமல்லாது தலைமை மாற்றம் அவசியம் எனவும் தெரிவித்திருந்தார். இதே கருத்தினையே நேற்று சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க இவற்றுக்கெல்லாம் பதிலடியாக மாவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திரிகையாளர் மாநாடுகள் மூலமாக கட்சி தலைமையை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)
சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)
சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)
விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை
ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி
சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)
விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)
கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி
மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்









