சமநிலை ஆனது இங்கிலாந்து டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது!
இருப்பினும் மறுமுனையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் 72 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 236 என்ற கௌரவமான ஸ்கோரை பாகிஸ்தான் எட்டியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி வேகப்பந்து வீச்சில் மிரட்டினர். பிராட் 4 விக்கெட்களையும், ஆண்டர்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். சாம் கரன், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
அடுத்துக் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. ரோரி பர்ன்ஸ் டக்வுட் ஆனார். சிப்லியும், ஜாக் கிரௌலியும் களத்தில் இருந்தனர். 5வது நாள் ஆட்டத்தில் கிரௌலி அரை சதம் கடந்தார். ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 110 ரன்களை எடுத்திருந்த போது, இரு அணிகளும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.
முகமது அப்பாஸ் இரண்டு விக்கெட்களையும், யஷிர் ஷா மற்றும் ஷாஹின் அஃப்ரிதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். வெளிநாட்டு மைதானங்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 7 முறை தோல்வியடைந்துள்ளது. இப்போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் இருந்த நிலையில் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் அணி, மற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் எனப் பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி கூறியிருந்தார். ஆனால் மழையால் பாகிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.








