Breaking News

இம் முறை பேச்சாளர் பதவியை எமக்கு வழங்க வேண்டும் - ரெலோ


எதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு கூட்டம் மற்றொரு மோதலிற்கு வழி கோலலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. 

இக்கூட்டத்திலேயே பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும். இம்முறை பேச்சாளர் பதவியை தமக்கு வழங்க வேண்டும் என ரெலோவின் தலைமைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது இதன்போதே குறித்த தீர்மானத்தை எட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை வெற்றியீட்டிய நிலையுல் புளொட் கட்சியும் ஒரு ஆசணத்தை கைப்பற்றியுள்ளது. 

அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும் 20ம் திகதி கூடும் சமயம் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும். இவற்றின் அடிப்படையில் கூட்டமைப்பு பெற்ற ஆசணத்தில் கணிசமானவை ரெலோ மற்றும் புளொட்டும் பெற்றுள்ளமையினால் பேச்சாளர் பதவி ரெலோவிற்கு வழங்கப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லையேல் அதனை இம் முறை புளொட்டிற்கு வழங்க வேண்டும் என தீர்மானகிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பங்காளி கட்சிகளான டெலோ,புளொட் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளன. 

தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்துடன் ஜந்து ஆசனங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.