Breaking News

மின்சார விநியோக தடை : முழுமையான விபரங்கள்!


இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது. 

இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் கிங்ஸ்லி கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு 6 மணி முதல் 7 மணி வரை ஒரு வலயத்திற்கும், ஏழு மணி முதல் எட்டு மணி வரை இரண்டாவது வலயத்திற்கும் 8 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்றாவது வலயத்திற்கும் 9 மணி முதல் 10 மணி வரை நான்காவது வலயத்திற்கும் என்ற அடிப்படையில் மின்சார தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

தேசிய மின்சார கட்டமைப்பின் மின்பிறப்பாக்கியை வழமைக்கு திருப்பும் செயற்பாடு நிறைவடையும் வகையில் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு இந்த மின்சார விநியோக தடை அமுலாக்கப்படவுள்தாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.