Breaking News

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்!


ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். 

2018ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், 37 போட்டிகளில் அந்த அணியை வழிநடத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறன் குறித்த, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக, இந்த முடிவை எடுத்துள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அணியின் புதிய கேப்டனாக இங்கிலாந்தைச் சேர்ந்த இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.