Breaking News

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ள விடயம்!


இலங்கை முழுவதும் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

அத்துடன், இன்றைய தினம் கம்பஹா, நீர்கொழும்பு காவல் துறை அதிகாரங்களுக்குட்பட்ட 19 பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சில மணித்தியாலங்களுக்கு தளர்த்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

எனினும் நாளை மற்றும் நாளை மறுதினம் குறித்த தளர்வு காலம் அமுலுக்கு வராது என காவல் துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.