பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: அர்ச்சனாவுக்கு ஆப்பு வைத்த பாலாஜி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாமினேஷன் படலத்தில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாமினேஷன் புரோசஸ் கார்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த நாமினேஷன் கார்டை பெற ஏழு பேர்களும் போட்டி போட்ட நிலையில் கடைசியில் சனம் நிஷா மற்றும் பாலாஜி ஆகிய மூவருக்கும் இடையே போட்டி வருகிறது. இதில் நிஷாவும் சனமும் விட்டுக்கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த திருப்பமாக நாமினேஷனில் சிக்கிய நபர்கள் தனக்கு பதிலாக நாமினேட் ஆகாத ஒருவரை நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவிக்க, நிஷா ஆஜித்தையும், பாலாஜி அர்ச்சனாவையும் நாமினேட் செய்கின்றனர்.
இதுவரை பாசவலை வீசி குருப்பிஸம் காரணமாக கடந்த சில வாரங்களாக நாமினேஷன் ஆகாமல் தப்பித்து வந்த அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பாலாஜி அவரை நாமினேஷன் செய்திருப்பது உண்மையில் பெரும் திருப்பம்தான். இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா சிக்கினால் அவரை வெளியேற்ற நெட்டிசன்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day50 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/XFIjMNWpUX
— Vijay Television (@vijaytelevision) November 23, 2020