Breaking News

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 7 பேர்: என்னென்ன பட்டப்பெயர்கள்!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் நிலையில் இன்றைய நாமினேஷன் படலம் குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இடம்பெற்றுள்ளன. 

முதலில் ஆரி நாமினேஷன் செய்வதற்காக கன்ஃபக்சன் அறைக்கு செல்லும் போது ’ஒரு நிமிடத்தில் திரும்பி வந்துவிடுவார்’ என சனம் கலாய்க்க அதற்கு ஆரி கோபப்பட்டு அதே கோபத்துடன் அவர் கன்ஃபக்சன் அறைக்கு சென்று நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் செய்யப்படுவதற்கு கூறப்பட்ட காரணங்களை செல்லப்பெயர்களாக அறிவித்த பிக்பாஸ், இந்த வாரம் ’சேஃப் கேம் ஆட்றாங்க’, ’ரூல்ஸ் பிரேக் பண்றாங்க’, ’ராஜா வீட்டு கண்ணுக்குட்டி போல் எந்த வேலையும் செய்யாமல் இருக்காங்க’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, சோம், பாலாஜி, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என பிக்பாஸ் அறிவித்தார்.

பாலாஜி மற்றும் அனிதா கிட்டத்தட்ட அனைத்து நாமினேஷனிலும் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று நடந்த நாமினேஷன் படலத்திலும் பாலாஜி, அனிதா பெயர்கள் உள்ளது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 7 பேர்களில் வரும் ஞாயிறு அன்று யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்