ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தல்!
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும், தனிமைப்படுத்தல் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை நீக்கினாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் தற்போதிலிருந்தே மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.