ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியினுள் ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைரீதியான ஊரடங்கு அனுமதிப் பத்திரம் ஒன்றை வெளியிட முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (02) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை secetary@mws.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.