மலால சுட்டுக் கொலை!
ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளரான பெண்ணொருவரும் அவரின் சாரதியும் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண் ஊடகவியலாளர் மனித உரிமைகள் தினமான நேற்று (10) ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எனிகாஸ் என்ற தொலைக்காட்சியில் ஊடகவியலாளராகப் பணியாற்றும் மலாலா மெய்வான்ட் (Malala Maiwand) என்ற ஊடகவியலாளரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்துக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஆயுததாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அவர் பயணித்த காரின் சாரதியும் இதன்போது பலியாகியுள்ளதாக பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் பலியான ஊடகவியலாளர் சிவில் சமூக செயற்பாட்டளராக இயங்கி வந்துள்ளார். அவரது தாயார் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவரும் சிவில் சமூக செயற்பாட்டளராக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.