Breaking News

ஷிவானி,அர்ச்சனாவை அசிங்கபடுத்திய பிக் பாஸ் டாஸ்க். மீம்ஸ்களை போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!


விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு போட்டியாளர்கள் காரணமாக இருந்தாலும் கமலஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு கமலஹாசன் நாசுக்காக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களிடம் பாராட்டை பெற்று விடுவார். யாரிடமும் வேணாலும் வாய்ப்பேச்சில் வென்று விடலாம் ஆனால் கமலஹாசனிடம் இது சாத்தியமில்லை என்பது அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நிரூபித்து வருகிறார்.

பிக்பாஸில் முதலில் போட்டியாளராக வருபவர்கள் அன்பு, பாசம் என வெளிப்படுத்தி பின்பு குழாயடி சண்டை போட்டு கொள்வது அனைத்து சீசனில் நடைபெற்று வருகிறது. தற்போது கூட இந்த சீசனில் கூட குழாயடி சண்டை நடைபெற்று தான் வருகிறது. என்ன தான் ஒரு பக்கம் சண்டை இருந்தாலும் மற்றொரு பக்கம் காதல் வருவது பிக்பாஸில் புதிதல்ல.

அந்த வகையில் விஜய் டிவியின் சீரியலில் நடித்த ஷிவானி மற்றும் பிக்பாஸ் பாலாஜி இவர்கள் இருவருக்கும் பிக்பாஸில் காதல் மலர்ந்தது தெரியவந்தது. அவர்களது காதலை போட்டியாளர்களும் அவ்வப்போது பேசி அதனை உறுதி செய்து வருகின்றனர்.

என்னதான் போட்டியாளர்கள் உண்மையை கூறினாலும் ஷிவானியும், பாலாஜிவும் நாங்க நல்ல நண்பர்கள் என பல நேரங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் செய்யும் செயலைப் பார்த்தால் காதலர்களாகத்தான் இருக்கத் முடியும் என பலரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவ்வபோது விஜே அர்ச்சனா அன்பு வெல்லும் என கூறுவார். அதனை வைத்து அன்பு செத்துபோச்சு எனவும் மீம்ஸ்களைப் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றிய மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.