Breaking News

இணையத்தில் கசிந்த தளபதி 65 படத்தின் தலைப்பு.. விஜயுடன் ஜோடி சேரும் ரசகுல்லா நடிகை!


தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது சன் பிக்சர்ஸ். இவர்களது தயாரிப்பில் தற்போது தளபதி விஜயை வைத்து ‘விஜய் 65’ படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 

முன்னதாக தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க இருந்த நிலையில், தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் ‘விஜய் 65’ படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  

இந்த நிலையில் ‘விஜய் 65’ படத்தின் டைட்டிலும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி, தளபதி வெறியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   
அதாவது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் ‘சுல்தான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இவ்வாறிருக்க ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.  

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு ‘ராக்கெட் ராஜா’ என பெயர் வைத்திருப்பதாகவும் அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் டிசம்பர் 31ஆம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட உள்ளதாம்.   
எனவே, தளபதியின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.