இந்த வாரம் இரண்டு நபர்களை வெளியேற்றும் பிக் பாஸ்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. ஏனென்றால் அனுதினமும் புது உத்திகளை கையாண்டு தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் மக்கள் அளித்துள்ள ஓட்டுகளின் அடிப்படையில், போட்டியாளர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல் முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்சன் நடைபெறப்போவதாகவும், யார் வெளியேற போகிறார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.
அதாவது, இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து சோம் கண்டிப்பாக வெளியே செல்வார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிஷா அல்லது ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே இந்த முறைதான் டபுள் எவிக்சன் நடைபெறப் போவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரஸ்ய நிகழ்வுகளை தன்னுள் கொண்டிருப்பதால், அனுதினமும் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
எனவே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் யார் வெளியே செல்ல போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.








