ரொம்ப ஓவரா ஆடுற: பாலாஜி கன்னத்தில் அடித்த ஷிவானி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டு புரமோக்களும் காரசாரமாக இருந்த நிலையில் மூன்றாவது புரோமோ ரொமான்ஸாக உள்ளது. ஷிவானி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன.
எந்திர மனிதன் போல பாலாஜி பேச, அதற்கு ஷிவானி பதில் கூற இருவரும் போடா போடி என செல்லமாக மாறி மாறி பேசிக்கொள்கின்றனர். அப்போது ஷிவானி பாலாஜியின் கண்ணத்தில் செல்லமாக அடித்து உனக்கு ரொம்ப தைரியம் வந்துவிட்டது. இந்த ரவுடியிஸம் எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம் என்று கூற அதற்கு பாலாஜி ’உன் பேச்சில் ஒரு திமிர் இருக்கின்றதே’ என்று கூறுகிறார்.
மேலும் ‘சனம் இருந்தால் உனக்கு ஏதாவது பட்டம் கொடுத்து கொண்டே இருப்பார், அவர் சென்ற பிறகு உனக்கு பட்டம் கொடுக்க ஆளில்லாம ஓவரா ஆடிக்கிட்டே இருக்க’ என்று ஷிவானி கூற, அதற்கு ‘நீயும் போய்ட்டா அதுக்கு கூட வழியில்லையே’ என்று பாலாஜி கூற அதற்கு ஷிவானி, ‘என்னது நான் போவேன், நீ இருப்பியா’ என்று செல்லமாக கூறுவதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.
#Day67 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/DmVy9ea4Cf
— Vijay Television (@vijaytelevision) December 10, 2020