Breaking News

வெளியானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

 


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையை முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2021 மார்ச் 1, வரை பல முறை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 4,513 மையங்களில் 622,300 க்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

423,746 பாடசாலை விண்ணப்பதாரர்களும் மற்றும் 198,606 தனியார் விண்ணப்பதாரர்களும் இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அழகியல் பாடத்தின் செயன்முறைப் பரீட்சை நடத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.