Breaking News

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள் பதிவு!

 


நாட்டில் மேலும் 58 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 31 பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 597 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 58 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில், 5 இலட்சத்து 17 ஆயிரத்து 377 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.