Breaking News

ஊரடங்கு நீக்கம் மீண்டும் தொற்று பரவலடையும் – இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

 


நாட்டை கட்டுப்பாடற்ற விதத்தில் திறப்பது, மீண்டும் தொற்று பரவல் ஆரம்பமாக வழிவகுக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் வீதம் அதிகமாகக் காணப்பட்டாலும் தற்போது இனங்காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நாட்டை கட்டுப்பாடின்றி திறப்பதன் மூலம் முன்னரை விடவும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க வழியேற்படலாம் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.