Breaking News

சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

 


நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நாடு மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் விநியோகஸ்தர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹம்பாந்தோட்டை, மரதன்கடவல, கெக்கிராவ, கதிரான மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் 24 மணி நேரமும் முழு பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் அந்த பாதுகாப்பைப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.