Breaking News

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன!

 


லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 358 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு அரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 164 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 179 ரூபாவாகும்.