Breaking News

உலக புகழ்பெற்ற தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

 

இலங்கை ஒரு தீவு என்பது  ஒரு தீவு . எல்லா பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பாக இதனை நாங்கள் வரையறுக்கிறோம். இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில தீவுகளைப் பற்றி பார்ப்போம்.


கிரீன்லாந்துஉலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களின் எல்லையாக உள்ளது. புவியியல் ரீதியாக இந்த தீவு அமெரிக்காவிற்கு சொந்தமானது. ஆனால் நிர்வாக ரீதியாக கிரீன்லாந்து டென்மார்க்கால் நிர்வகிக்கப்படுகிறது. ஏனென்றால், கிரீன்லாந்து மற்றும் அதன் அண்டை நாடான ஐஸ்லாந்தை டென்மார்க் உள்ளிட்ட நோர்டிக் நாடுகளைச் சேர்ந்தவர்களே கண்டுபிடித்தனர். நோர்டிக் நாடுகளிலிருந்து கிரீன்லாந்திற்கு மக்களை ஈர்க்கும் நோக்கில் இந்த தீவுக்கு கிரீன்லாந்து என்ற பெயர் வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.


செயின்ட் ஹெலினா தீவு


தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு கிரேட் பிரிட்டனுக்கு சொந்தமானது. உலகில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளில் ஒன்றான இந்த தீவில், போர்த்துக்கேய ஆக்கிரமிப்பின் போது கூட மக்கள் வந்து வசிக்கவில்லை. இருப்பினும், அதன் இருப்பிடத்தின் முக்கியத்துவம் காரணமாக, ஆசியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கான கப்பல்களுக்கான அழைப்பு துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த தீவில் வைத்து பேரரசர் நெப்போலியன் கைதியாக இறந்த பின்னர் செயின்ட் ஹெலினா என்ற இந்த தீவின் பெயர் உலகப் புகழ் பெற்றது.


கலபகோஸ் தீவுகள்ஈக்குவடோரின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த தீவுக்கூட்டம் எரிமலை வெடிப்பின் விளைவாக நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது. ஆரம்பகால ஆய்வாளர்கள் தீவுக்குள் வாழ்ந்த உள்ளூர் ஆமைகளைக் குறிக்கும் வகையில் ஆமை தீவு என்று பொருள்படும் கலபகோஸ் என்று பெயரிட்டனர். பின்னர் தீவில் வசித்த ஆமைகள் உள்ளிட்ட உள்ளூர் விலங்குகளின் தன்மையை அவதானித்த சார்லஸ் டார்வின், உலகிற்கு பரிணாமத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த தீவுக்கூட்டம் வரலாற்றில் பெயர் பெற்றது.


கிரீட் தீவுகிரீட் தீவு ஐரோப்பாவின் முதல் மேம்பட்ட நாகரிகத்தின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. மினோவான் நாகரிகத்தின் தொட்டிலான க்ரீட் பின்னர் கிரேக்க நாகரிகத்தால் ஆதிக்கம் செலுத்தியது. மத்தியதரைக் கடலில் தீவின் இருப்பிடத்தின் மூலோபாய முக்கியத்துவத்தின் அடிப்படையில், தீவு கிரீஸ், ரோம் மற்றும் துருக்கி உட்பட பல ஏகாதிபத்திய கோட்டைகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இன்று, கிரீட் ஒரு சுற்றுலா சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


சார்டினியா தீவுஇத்தாலிக்கு சொந்தமான பெரிய தீவுகளில் சிசிலி தீவிற்கு பிறகு இரண்டாவது பெரிய தீவான சார்டினியா, கற்காலத்தில் இருந்து மக்கள் வசித்து வந்த ஒரு தீவாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் கார்தீஜினிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சார்டினியா, பின்னர் ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாகவும் பின்னர் பைசண்டைன் பேரரசின் பகுதியாகவும் மாறியது. பின்னர் சர்தீனியாவைக் கைப்பற்றிய சவோய் வம்சம், இத்தாலி முழுவதையும் ஒன்றிணைக்க முடிந்தது. இன்று, சர்தீனியா ஒரு சுற்றுலா சொர்க்கமாகவும், பொருளாதார மையமாகவும் இத்தாலிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பாக உள்ளது.

 

ஹவாய் தீவுகள்ஹவாய் தீவுகள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஒரேயொரு மாகாணம் மற்றும் தீவுக்கூடம் ஆகும். ஆரம்பத்தில் பழங்குடி தலைவர்களால் ஆளப்பட்ட ஹவாய் தீவுக்கூட்டத்திற்கு, மிஷனரிகள் கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தின. மேலும் இதன்மூலம் மேற்கத்திய பாணியிலான முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அமெரிக்காவில் வணிகர்களின் சதியினால் கடைசி ஹவாய் ராணியைத் தூக்கியெறிந்து பின்னர் அதை ஒரு அமெரிக்க மாகாணமாக மாற்றியது.


டாஸ்மேனியாடாஸ்மேனியாவைச் சுற்றி சுமார் முந்நூற்று முப்பது தீவுகள் உள்ளன. இது பாக் ஜலசந்தியால் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் வசித்த பழங்குடியினர் பிரதான நிலப்பகுதியின் பழங்குடியினரிடமிருந்து தெளிவான வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாகரிகத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால் ஐரோப்பியர்கள் கொண்டு வந்த நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் கிட்டத்தட்ட முழு மக்களும் அழிக்கப்பட்டனர். இன்று, தீவின் நிலப்பரப்பின் பெரும்பகுதி உலக பாரம்பரிய தளமாகவும் தேசிய பூங்காவாகவும் உள்ளது.